Publish Date: Fri, 21 Oct 2022 (09:29 IST)
Updated Date: Fri, 21 Oct 2022 (09:59 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவது பெருமை என்று கூறியுள்ளார்.
உலகக்கோப்பைக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் அணிகளின் செயல்பாடு மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஆகியவை பற்றி கணித்து கூறி வருகின்றனர்.
கபில்தேவ் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல 30 சதவீதம்தான் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் இப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “இப்போதே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி பற்றி நினைக்க முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணி கோப்பையை வெல்வதே ஆசை. ஆனால் அதற்கு நாங்கள் நிறைய திருத்திக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.