Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு… இளம் வீரர்களுக்கு கம்பீரின் அறிவுரை!

vinoth
வெள்ளி, 13 ஜூன் 2025 (08:43 IST)
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இந்த தொடருக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக இந்திய அணி இங்கிலாந்து செல்லும் போது தொடர்ந்து தோல்விகளைப் பெற்று வரும். ஆனால் தோனி மற்றும் கோலி கேப்டன்சியில் இந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்திய அணி தொடர்களை வென்றது.

ஆனால் இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த இளம் அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் வெற்றி என்பது இந்த தொடரில் கேள்விக்குறியாகவுள்ளது.

இந்நிலையில் இளம் வீரர்களுக்கு பயிற்சியாளர் கம்பீர் கொடுத்துள்ள அறிவுரைக் கவனம் பெற்றது. அதில் “இந்த சுற்றுப்பயணத்தை இரண்டு விதமாக நாம் பார்க்கலாம்.  ஒன்று நாம் நம்முடைய மூன்று உச்ச அனுபவமுள்ள வீரர்கள் இல்லாமல் விளையாடுகிறோம். மற்றொன்று நம் நாட்டுக்கு மிகச்சிறப்பானதை செய்ய ஒரு சரியான வாய்ப்பு.  நான் உங்களைப் பார்க்கும் போது உங்கள் கண்களில் பசி தெரிகிறது.” என உத்வேகம் அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments