Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்போஸ் ஆகிவிட்டதா தோனி மேஜிக்… ரசிகர்களே ஓய்வு பெற சொல்லி புலம்பல்!

vinoth
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (08:26 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்பிருந்தும் தோல்வியை தழுவியது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 183 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய சி எஸ் கே அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்ததால் தடுமாற்றத்தோடு விளையாடியது. சென்னை அணியின் ஐகான் தோனி, 11 ஆவது ஓவரிலேயே களமிறங்கினாலும் அவர் ஆடிய நிதான ஆட்டத்தால் சென்னை அணியால் வெற்றிப் பெற முடியவில்லை.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் மைதானத்துக்கு வெளியே இருந்த ரசிகர்கள் தோனியின் டெஸ்ட் இன்னிங்ஸ் குறித்து புலம்பியுள்ளனர். தோனி இல்லாமல் வேறொருவர் இருந்திருந்தால் இந்த போட்டியை நாம் வெற்றி பெற்றிருக்கலாம், தோனி ஓய்வை அறிவித்திருக்கலாம் என்றெல்லாம் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் தோனி சிக்ஸ் அடித்தாலே போதும் என சொல்லிவந்த ரசிகர்கள் கூட தோனி முக்கியமில்லை, அணிதான் முக்கியம் என்று நினைக்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments