Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக மருத்துவமனைக்கு செல்லும் ரசிகர்கள்… என்ன காரணம்?

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக மருத்துவமனைக்கு செல்லும் ரசிகர்கள்… என்ன காரணம்?
, வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:14 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அகமதாபாத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அகமதாபாத் நகரில் உள்ள ஹோட்டல் அறைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. ஹோட்டல் அறை வாடகை வழக்கமான கட்டணத்தை விட 15 மடங்கு அதிகபடுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் போட்டியைக் காண அந்த மைதானத்தைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் உடல் பரிசோதனை என்ற பெயரில் நிறைய நபர்கள் மருத்துவமனைகளில் அட்மிட் ஆக முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை…” பவுலிங் பற்றி பும்ரா கருத்து!