19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.
இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏற்கனவே, இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சீனா நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
அந்த வகையில் இந்தியா ஹாக்கி, கிரிக்கெட், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறப்பாக விளையாடி இதுவரை இல்லாத அளவாக 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 1 07 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ் நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது.
இதில், வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்குகிறார். தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சம், ரூ. 30 லட்சம், ரூ. 20 லட்சம் என ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.