சின்னசாமி மைதானம் எங்களுக்கு தலைவலியாக உள்ளது… ஹோம் கிரவுண்ட் பற்றி டு பிளசீஸ் அதிருப்தி!

vinoth
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:19 IST)
நேற்று ஐதராபாத்தில் நடந்த பெங்களூ மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில்  பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணிக்காக ரஜத் படிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்துக் கலக்கினார். அவரின் இன்னிங்ஸ்தான் ஆர் சி பி அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

அதெ போல நேற்றைய போட்டியில் பவுலர்களும் சிறப்பாக பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்களை வீழ்த்தினர். இந்த போட்டி பற்றி பேசிய ஆர் சி பி கேப்டன் பாஃப் டு பிளசீஸ் இப்போது நிம்மதியாக தூங்கப் போவோம் எனக் கூறியிருந்தார். மேலும் தங்களுடைய ஹோம் க்ரவுண்டான சின்னசாமி மைதானம் பந்துவீசுவதற்குக் கடினமான ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.

அதில் “சின்னசாமி மைதானம் எங்களுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. அது பந்துவிசக் கடினமான மைதானம். அதற்கு ஏற்றவாறு எங்களைத் தகவமைக்கக் கடினமாக முயன்று வருகிறோம்.ஆனால் அது கடினமானதாகவே உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments