Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு வழியாக ஆறுதல் வெற்றியை ருசித்த ஆர் சி பி… ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்!

ஒரு வழியாக ஆறுதல் வெற்றியை ருசித்த ஆர் சி பி… ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்!

vinoth

, வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (07:00 IST)
நேற்று ஐதராபாத்தில் நடந்த பெங்களூ மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணி ஆரம்பமே அடித்து ஆட முயன்றது. ஆனால் பவர்ப்ளே முடிவதற்கு 3.5வது ஓவரில் டூ ப்ளெசிஸ் விக்கெட் விழுந்தது. வில் ஜாக்ஸும் அதிர்ச்சிகரமாக 6 ரன்களில் அவுட் ஆனார். கோலியும், பட்டிதாரும் நின்று விளையாடி ஆளுக்கு ஒரு அரைசதம் வீழ்த்தி அணியின் ரன்களை உயர்த்தினர்.

கேமரூன் க்ரீன் 20 பந்துகளுக்கு 37 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக அவர் 11 ரன்களில் அவுட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்து 207 ரன்களை சன்ரைசர்ஸ்க்கு டார்கெட் வைத்துள்ளது.

இதன் பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் அந்த அணியால் அதிரடியைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த சீசனில் 7 போட்டிகளில் தோற்று 10 ஆவது இடத்தில் இருந்த ஆர் சி பி இந்த போட்டியின் மூலம் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கோடை கால நீச்சல் பயிற்சி!