Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சனைகளை சரிசெய்யும் விதத்தில் விளையாடுகிறேன்.. ஆட்டநாயகன் ரஜத் படிதார்!

SRH vs RCB
vinoth
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (11:08 IST)
நேற்று ஐதராபாத்தில் நடந்த பெங்களூ மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில்  பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணிக்காக ரஜத் படிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்துக் கலக்கினார். அவரின் இன்னிங்ஸ்தான் ஆர் சி பி அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதையடுத்து இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவர் அறிவிக்கப்பட்டார். அப்போது பேசிய அவர் “ஸ்பின்னர்களுக்கு எதிராக எந்த திட்டமும் இல்லை. நான் அனைத்து பவுலர்களை அட்டாக் செய்து விளையாடவேண்டுமென்றுதான் விளையாடுகிறேன். நான் வீட்டுக்கு சென்றால் அங்கிருக்கும் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வேன். அதே போலதான் பேட் செய்ய விரும்புகிறேன்.

எப்போதும் பேட்டிங் இலக்கணத்தோடு விளையாட வேண்டுமென விரும்புகிறேன். என்னால் எந்தந்த விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியுமோ அதை செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments