நேற்று ஐதராபாத்தில் நடந்த பெங்களூ மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணி ஆரம்பமே அடித்து ஆட முயன்றது. அந்த அணியின் கோலியும், பட்டிதாரும் நின்று விளையாடி ஆளுக்கு ஒரு அரைசதம் வீழ்த்தி அணியின் ரன்களை உயர்த்தினர். இதனால் அந்த அணி 206 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் அந்த அணியால் அதிரடியைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த சீசனில் 7 போட்டிகளில் தோற்று 10 ஆவது இடத்தில் இருந்த ஆர் சி பி இந்த போட்டியின் மூலம் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த போட்டியில் கோலி 43 பந்துகளில் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் 51 ரன்கள் சேர்த்தார். அவரது இந்த ஆமைவேக இன்னிங்ஸ் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் மத்தியில் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. இந்த போட்டியில் பவர் ப்ளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்த கோலி பவர்ப்ளேக்குப் பிறகு ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் பந்துகளை வீணடித்து விளையாடினார். அரைசதம் அடித்த பின்னர் அதிரடியாக விளையாட முற்பட்ட அவர் அவுட் ஆனார். ஆனால் அவர் ஆமைவேகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்முனையில் ரஜத் படிதார் ஒரே ஓவரில் 27 ரன்கள் சேர்த்து வானவேடிக்கைக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.