இங்கிலாந்து ப்ளேயிங் லெவன் அறிவிப்பு… ஆர்ச்சர் இடம்பெற்றாரா?

vinoth
செவ்வாய், 1 ஜூலை 2025 (10:26 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஹெட்டிங்லேவில் நடந்த முதல் போட்டியில் அபாரமாக விளையாடி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

இதனால் இந்திய அணியில் இந்த போட்டிக்கு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பும்ரா விளையாடுவாரா என்பதும் சந்தேகம்தான்.

இந்நிலையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி எந்த மாற்றமும் இல்லாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே அணியுடனேயே விளையாடவுள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இங்கிலாந்து ஆடும் அணி.
ஜாக் கிராலி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக்,  பென் ஸ்டோக்ஸ்,  ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜாஸ் டாங், பிரைடன் கர்ஸ், சோயிப் பஷிர்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments