சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மூதாட்டி ஒருவர் போஸ்டர் மீது செருப்பு வீசிய விவகாரம் குறித்து ஜெயக்குமார் மேலும் கூறியதாவது:
விருகம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவர் போஸ்டர் மீது செருப்பு வீசியதை வீடியோ எடுத்த பிரதீஸ் என்ற இளைஞரை கன்னியாகுமரி வரை சென்று காவல்துறை கைது செய்துள்ளது.
அந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த திமுக அரசு,தனது சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டுகிறது என்பதற்கு இதுவே சாட்சி!
எந்த மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தார்களோ,
அந்த மக்களிடமே தன் அதிகார வெறியை தீர்ப்பதா?
மூதாட்டியின் கோபத்திற்கு பின்னால் ஏதோ ஒரு கோரிக்கை உள்ளது. அதை கேட்க மறுத்து கைது செய்ய முயல்வது முட்டாள்தனம்!