Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50 ஓவர் உலகக் கோப்பை தொடரை இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் பிரபல ஓடிடி!

Advertiesment
அக்தர்
, வெள்ளி, 9 ஜூன் 2023 (14:18 IST)
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த தொடரை ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் முதல் முறையாக இலவசமாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த ஓடிடியில் சந்தாதாரர்களாக இல்லாதவர்களும் இலவசமாக போட்டிகளை பார்க்கலாம். அதே போல விரைவில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை தொடரையும் இலவசமாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா ஓடிடி இலவசமாக ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் அதிக ஓடிடி வாடிக்கையாளர்களை தன்பக்கம் இழுத்தது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வின் இருக்கும் போது ஆடுகளத்தைப் பற்றி கவலைப் படக்கூடாது… சுனில் கவாஸ்கர் விமர்சனம்!