Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்வின் இருக்கும் போது ஆடுகளத்தைப் பற்றி கவலைப் படக்கூடாது… சுனில் கவாஸ்கர் விமர்சனம்!

Advertiesment
ரஹானே
, வெள்ளி, 9 ஜூன் 2023 (13:45 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேஎ நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமாக சதமடித்து அணியை வலுவான ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான அஸ்வினை எடுக்காதது மிகப்பெரிய தவறு என இந்திய அணியை முன்னாள் வீரர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி சுனில் கவாஸ்கர் “அஸ்வினை எடுக்காததால் ஒரு துருப்புச் சீட்டை இந்தியா இழந்துள்ளது. அவரை போல நம்பர் 1 பேட்ஸ்மேன் அணியில் இருக்கும் போது ஆடுகளத்தின் தன்மையை பற்றி நாம் பார்க்க கூடாது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோ சினிமாவின் அதிரடி எதிரொலி: இனி ஹாட்ஸ்டாரிலும் கிரிக்கெட் இலவசம்..!