Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜியோ சினிமாவின் அதிரடி எதிரொலி: இனி ஹாட்ஸ்டாரிலும் கிரிக்கெட் இலவசம்..!

Disney Plus Hotstar
, வெள்ளி, 9 ஜூன் 2023 (12:59 IST)
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பியது என்பதும் இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் ஜியோ சினிமாவில் கிரிக்கெட் போட்டிகளை பார்த்தனர் என்பதும் தெரிந்ததே.
 
 ஐபிஎல் முடிந்த பின்னரும் தற்போது லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்கள் ஜியோ சினிமாவில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பி ஜியோ சினிமா பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் நிறுவனமும் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள ஆசிய கோப்பை ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை இனி இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த சலுகை மொபைல் பயனாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
ஜியோசினிமாவின் அதிரடியால் ஹாட்ஸ்டார் தற்போது இலவசமாக கிரிக்கெட் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களை மிஸ் பண்றோம் ரிஷப் பண்ட்… டிவிட்டரில் புலம்பும் ரசிகர்கள்!