Publish Date: Mon, 31 Oct 2022 (09:15 IST)
Updated Date: Mon, 31 Oct 2022 (09:27 IST)
கடந்த பல ஆண்டுகளாக அணியில் தனது இடத்துக்காக போராடிவந்த தினேஷ் கார்த்திக் தனது 37 ஆவது வயதில் தற்போது டி 20 அணியில் பினிஷராகக் கலக்கி இடம்பிடித்து வருகிறார். இதையடுத்து தற்போது அணியில் இடம்பிடித்து வரும் அவர் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பிடித்தார்.
ஆனால் இதுவரை அவர் விளையாடிய 2 போட்டிகளிலும் அவர் நல்ல ஸ்கோரை செய்யவில்லை. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் பீல்டிங் செய்த போது பாதியிலேயே முதுகுவலி காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.
இதனால் அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.