Publish Date: Mon, 09 Jun 2025 (11:48 IST)
Updated Date: Mon, 09 Jun 2025 (11:52 IST)
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார்.
மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இந்த கிசுகிசுக்களுக்கு தூபம் போட்டுள்ளது. அதில் சாம்சன் மஞ்சள் நிறக் கோட்டைத் தாண்டுவது போல நடந்து செல்ல கேப்ஷனா “நகர வேண்டிய நேரம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் அடுத்த சீசனில் சி எஸ் கே அணிக்கு தாவவுள்ளதாக ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.