இளம் வீரர் முஷீர் கானை ‘வாட்டர் பாய்’ எனக் கிண்டல் செய்தாரா கோலி?.. கிளம்பிய சர்ச்சை!

vinoth
சனி, 31 மே 2025 (08:27 IST)
ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில் பெங்களூரு அணி எளிதான வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி விரைவாக விக்கெட்களை இழந்து 102 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதை பெங்களூரு அணி பத்தே ஓவர்களில் விரட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக முஷீர் கான் இம்பேக்ட் வீரராகக் களமிறங்கினார். அப்போது களத்தில் ஃபீல்ட் செய்துகொண்டிருந்த விராட் கோலி அவரை ‘வாட்டர் பாய்’ என சொல்லிக் கிண்டல் செய்ததாக சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

ஆனால் இம்பேக்ட் ப்ளேயராக இறங்குவதற்கும் சிறிது நேரம் முன்புதான் முஷீர் கான் வாட்டர் பாயாக மைதானத்துக்குள் வந்தார். அதைக் குறித்துதான் ஆச்சர்யமாக “இப்போதுதானே அவர் வாட்டர் பாயாக வந்தார்” என அணி வீரர்களிடம் ஆச்சர்யத்துடன் கோலி சொன்னதாக மற்றொரு தரப்பினர் பேசிவருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments