Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தல' தோனியின் புதிய தோற்றம்...சமூக வலைதளங்களில் வைரல்

'தல' தோனியின்  புதிய தோற்றம்...சமூக வலைதளங்களில் வைரல்
, வியாழன், 28 ஜனவரி 2021 (23:32 IST)
தல தோனி புது கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பை உள்ளிட்ட மூன்று கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவரும் பல இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ளவர் தோனி.

இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். பின்னர் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். ஆனால் சென்னை அணி சூப்பர் லீக்கில் வெளியேறி விமர்சனங்களைச் சந்தித்தது.

இந்நிலையில், அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலும்

தோனி சென்னை அணியில் கேப்டனாகப் பதவியேற்பார் என எதிர்பார்ப்புள்ளது.

சமீபத்தில் இந்திய அரசு இந்திய விசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதியளித்துள்ள நிலையில், தோனி தனது பண்ணையில் விளைந்த காய்கள், பழங்கள் ஆகியவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து நாட்களை பொழுது போக்கி வருகிறார். அவரது ரசிகர்கள் தோனியின் ஒரு தும்மலையும் தலைப்புச் செய்தியாக்கிவிடுவார்கள். அப்படியிருக்க தல தோனி புது கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படத்தைச் சும்மா விடுவார்களா என்ன??

புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் தோனியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டுவருகிறது.

சில நாட்களுக்கு முன் கடந்த பத்தாண்டுகளில் ஐசிசியின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதுக்கு விராட் கோலியும், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதுக்கு தோனியும் ஐசிசியின் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 மேலும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் 14 வது லீக்கில் சென்னை அணிநிர்வாகம் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் அவரது புகழும் அவரைப் பற்றிய செய்திகளும் எப்போது ஓயாது என்று அவரது ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிசிசிஐ தலைவர் கங்குலி 2 வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை !