இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி வந்ததை அடுத்து கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவருக்கு இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இப்பிரச்சனை பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் ஒரு அடைப்பு அகற்றப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.
பின்னர் மீண்டும் நேற்று கொல்கத்தாவின் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதயம் செயல்பாடு தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்து அவர் உடல்நிலைசீசரக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், கங்குலிக்கு 2 வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க மருத்துவமனை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.