27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. வழக்கமாக chokers என கேலி செய்யப்படும் தென்னாப்பிரிக்க அணி இம்முறை பலமிக்க ஆஸி அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றியை இந்தியாவில் உள்ள ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா. கருப்பினத்தைச் சேர்ந்தவரான அவருடைய உயரம் மற்றும் பேட்டிங் ஸ்டைல் ஆகியவற்றின் காரணமாக பல கேலிகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இதற்கு மேலாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையால்தான் அவர் அணியில் நீடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
ஆனால் இப்போது அவர் தலைமையில்தான் தென்னாப்பிரிக்க அணிக் கோப்பையை வென்றுள்ளது. இதையொட்டி தற்போது சமூகவலைதளங்களில் “இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்.” என பலரும் டெம்பா பவுமாவைப் புகழ்ந்து பேசி வருகின்றனர்.