Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்விகளால் ரசிகர்களை ஏமாற்றிய சி எஸ் கே… டிக்கெட் விற்பனை மந்தம்!

vinoth
திங்கள், 21 ஏப்ரல் 2025 (13:31 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தோனி கேப்டனான பின்னர் சி எஸ் கே அணி ஒரு போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. இதனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது சிக்கலாகியுள்ளது. சி எஸ் கே அணியின் இந்த நிலைக்குக் காரணம் மாறிவரும் டி 20 போட்டிகளின் ஆட்டம் பற்றி சி எஸ் கே அணி புரிந்துகொள்ளாமல் மந்தமாகப் பேட்டிங் செய்வதுதான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சிஎஸ்கே அணி அடுத்து மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை மந்தமாகியுள்ளது. வழக்கமாக சி எஸ் கே அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அறிவித்த உடனேயே ஆன்லைனில் விற்றுத் தீர்ந்துவிடும். அதன் பின்னர் கள்ளச்சந்தையில் பல மடங்கு விலையேற்றப்பட்டு விற்கப்படும். ஆனால் இந்த போட்டிக்கான டிக்கெட்கள் விறபனை மந்தமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments