Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜாதவும், சாவ்லாவும்தான் நீங்க சொல்ற இளம் வீரர்களா? – தோனியால் கடுப்பான சிஎஸ்கே பேன்ஸ்!

Advertiesment
IPL 2020
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (10:02 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியை தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கேப்டன் தோனி அளித்த பதில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி பெரும் தோல்வியை தழுவியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுவரையிலான 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற சிஎஸ்கே அணி தரவரிசையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தோல்வி குறித்து பேசிய தோனி “இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை” என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியும் கூட அவர்களுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்காமல் மோசமாக ஆடியவர்களை அணியில் வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கேவின் இளம்வீரர்களாக ஜகதீசன், இம்ரான் தாஹிர், கரன் சர்மா போன்றவர்கள் கடந்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், மோசமாக விளையாடி வரும் கேதர் ஜாதவ்க்கும், அதிக ரன்களை கொடுத்துவிடும் ப்யூஷ் சாவ்லாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது ஏன்? இவர்கள்தான் தோனி சொல்லும் இளம் வீரர்களா? என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

பல கிரிக்கெட் விமர்சகர்களும் கூட சிஎஸ்கே அணியின் விளையாடும் முறை, அணி தேர்வு ஆகியவை இந்த முறை மிகவும் மோசமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் அனுஷ்கா ரொமான்ஸ் போட்டோ – கிளிக்கியது நம்ம டிவில்லியர்ஸாம்!