நீங்க ஏன் இவ்ளோ சென்சிட்டிவ்வா இருக்கீங்க… கம்பீருக்கு நீதிமன்றம் அறிவுரை!

Webdunia
வியாழன், 18 மே 2023 (15:06 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவர் குறித்து இந்தி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. அதில் கம்பீர் குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக அதில் அவர் அரசியலை விட கிரிக்கெட்டில்தான் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இருந்த நிலையில், அந்த நாளிதழை எதிர்த்து கம்பீர் மான நஷ்ட வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் கம்பீர் தரப்பிடம் “நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. ஏன் இவ்வளவு சென்சிட்டிவ்வாக இருக்கிறீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் தடித்த தோலுடன் இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments