Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Prasanth K
வியாழன், 5 ஜூன் 2025 (16:46 IST)

நேற்று ஆர்சிபியின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூர் சின்னசாமியில் நடந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து ஆர்சிபி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பெங்களூரில் நேற்று நடந்த அசம்பாவிதம் ஆர்சிபி குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, RCB இறந்தவர்களின் பதினொரு குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளது. மேலும், இந்த சோகமான சம்பவத்தில் காயமடைந்த ரசிகர்களுக்கு ஆதரவாக RCB Cares என்ற அமைப்பையும் உருவாக்குகிறது.

 

நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எங்கள் ரசிகர்கள் எப்போதும் இதயத்தில் இருப்பார்கள். நாங்கள் துக்கத்தில் உடன் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.

 

ஜூன் 3ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்த நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள கர்நாடக அரசு. உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்திருந்தது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments