Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிறிஸ் கைல் விலகல் –இந்தியாவுக்கெதிரான ஒருநாள் மற்றும் டீ20 அணி அறிவிப்பு

Advertiesment
கிறிஸ் கைல் விலகல் –இந்தியாவுக்கெதிரான ஒருநாள் மற்றும் டீ20 அணி அறிவிப்பு
, திங்கள், 8 அக்டோபர் 2018 (13:05 IST)
இந்தியாவுக்கெதிராக ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கான மேற்கு இந்திய தீவுகள் அணி அறிவுக்கப்பட்டுள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட்டில் இளம் வீரர்களைக் கொண்ட பரிதாபகரமாக தோற்றுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் போட்டி மற்றும் நவம்பர் 4-ந்தேதி தொடங்கவுள்ள இருபது ஓவர் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிறிஸ் கைல் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கெதிரான தொடர் மட்டுமல்லாது அடுத்து வங்கதேசத்திற்கு செல்ல இருக்கும் தொடரில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அந்த நாட்டில் நடக்கும் தொடரிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலும் கைல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறார்.

தற்போது 39 வயதாகும் கிறிஸ் கைல் சமீபத்தில்தான் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் விவரம்
சேஸன் ஹோல்டர்(கே), பேஃபியன் ஆலன், சுனில் அம்ஃபிரிஸ், தேவேந்திர பிஷூ, சந்தர்பால் ஹெம்ராஜ், ஷிம்ரன் ஹெட்மைர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசஃப், எவின் லெவிஸ், அஷ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மென் பவல், கீமார் ரோச், மார்லன் சாம்வேல், ஒஷானே தாமஸ்.

இருபது ஓவர் போட்டிகளுக்கான் வீரர்கள் விவரம்
கார்லோஸ் பிராத்வெயிட்(கே), பேஃபியன் ஆலன், டாரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மைர், எவின் லெவிஸ், ஓபெட் மெக்காய், அஷ்லே நர்ஸ், கீமோ பால், கேரி பியர்ரெ, கைரன் பொல்லார்டு, ரோவ்மென் பவல், தினேஷ் ராம்டின், ஷெர்ஃபென் ரூதர்ஃபோர்டு, ஒஷானே தாமஸ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்