Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

Advertiesment
ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

vinoth

, வெள்ளி, 22 நவம்பர் 2024 (14:07 IST)
16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

ஆனால் அது மிகத் தவறான முடிவோ என்று வருத்தப்படும் அளவுக்கு இந்தியாவின் பேட்டிங் அமைந்தது. ஆஸி வேகப்பந்து தாக்குதலில் நிலைகுலைந்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டும் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார். ஆஸி சார்பில் ஹேசில்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து தற்போது ஆஸி அணி தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. ஆஸி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை பும்ரா அவுட்டாக்கி டாப் ஆர்டரை நிலைகுலைய வைத்தார். தற்போது ஆஸி அணி 4 விக்கெட்களை இழந்து 33 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!