தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, அதில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட இந்தியாவின் ஐந்தாவது பெரிய கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய அரசியல் வரலாற்றில், ஒரு கட்சி தொடங்கிய ஒரு வருடத்திற்குள் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்வது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டிருப்பதாகவும், 50 வருட பாரம்பரியம் கொண்ட அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளை விட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இன்னும் சில மாதங்களில் அதிகரித்து விடும் என்றும் கூறப்படுகிறது.
மற்ற நடிகர்களை போல் இல்லாமல், விஜய் அரசியல் நகர்வில் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறார். சிவாஜி முதல் கமல் வரை பெற்ற தோல்வியை, விஜய் பெற மாட்டார் என்றும், அவரது பாணியே தனித்துவமானது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி, தனது முதல் தேர்தலிலே ஆட்சியைப் பிடிக்கத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை அறிந்திருக்கும் என்றும், 2026 தேர்தலில் ஒரு புதிய புரட்சி ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.