இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

vinoth
வெள்ளி, 27 ஜூன் 2025 (09:43 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த மைதானம் இந்திய அணிக்கு மிகவும் துரதிர்ஷ்டமான மைதானமாகவே இதுவரை இருந்துள்ளது. இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டும் டிரா செய்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பும்ரா ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். அவர் இல்லாமல் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படி செயலாற்றப் போகிறது என்பது கவலைக்குரியதாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments