Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று வடிவிலானக் கிரிக்கெட்டிலும் அபாயமான வீரர்… பண்ட்டைப் பாராட்டிய இங்கிலாந்து கேப்டன்!

vinoth
புதன், 2 ஜூலை 2025 (09:37 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதில் அவருக்கு நெற்றி மற்றும் கால் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்த அவர் ஒரு ஆண்டுகாலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.

அதன் பின்னர் குணமாகி சர்வதேசக் கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ள அவர் பழைய படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், தற்போது இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரிஷப் பண்ட்டை புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “எதிரணி வீரராக இருந்தாலும் ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை நான் ரசித்துப் பார்ப்பேன்.  3 வடிவிலான போட்டிகளிலும் அவர் பேட்டிங் எனக்குப் பிடிக்கும். கிரிக்கெட்டின் அபாயகரமான வீரர்களில் அவரும் ஒருவர்.” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு.. பும்ரா, தாக்கூர் சாய் சுதர்சன் வெளியே… இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி… தேதி பற்றி வெளியான தகவல்!

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடர்… ஆனா பேரு மட்டும் வேற!

73 ரன்கள் எடுத்தால் போதும்.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஜோ ரூட்?

அடுத்த கட்டுரையில்
Show comments