Publish Date: Mon, 30 Jun 2025 (08:51 IST)
Updated Date: Mon, 30 Jun 2025 (08:54 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதில் அவருக்கு நெற்றி மற்றும் கால் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்த அவர் ஒரு ஆண்டுகாலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.
அதன் பின்னர் குணமாகி வந்த அவர் விபத்துக்கு முந்தைய இன்னிங்ஸ்கள் போலவே ஆக்ரோஷமாக ஆடி வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துக் கலக்கினார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா “பண்ட் மருத்துவமனை வந்ததும் கேட்டதும் முதல் கேள்வியே, என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியுமா என்பதுதான்” என தெரிவித்துள்ளார்.