இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீரென கடந்த ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்றளவும் விவாதப் பொருளாக உள்ளது. தற்போது 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. ஏற்கனவே அவர் டி 20 போட்டிகளில் இருந்தும் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்துவிட்டதால் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
சமீபத்தில் இந்திய அணியில் பிட்னெஸுக்காக நடத்தப்படும் யோ யோ டெஸ்ட்டில் அவர் சமீபத்தில் கலந்துகொண்டார். அதில் அவர் தேர்வாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்திய அணி இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிசிசிஐ கோலி மீது அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவரிடம் இருந்து பிசிசிஐக்கு முறையாக தகவல் தொடர்பு நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் அவரை தொலைபேசியில் அழைத்து ஒருநாள் போட்டிகளில் அவரின் எதிர்கால திட்டம் என்ன என்று கேட்டதாகவும், அதற்கு அவரிடம் இருந்து முறையான பதில் எதுவும் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.