வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

vinoth
புதன், 6 ஆகஸ்ட் 2025 (14:01 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டர்சன் –டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் மிகவும் பரபரப்புடன் ஒரு டி20 தொடர் போல விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இரு அணிகளும் தலா 2 போட்டிகளை வென்று தொடர் சமனில் முடிந்துள்ளது. மூத்த வீரர்கள் இல்லாத இந்திய அணி இந்த தொடரை சமனில் முடித்ததே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் இந்திய அணியில் ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஜெய்ஸ்வால், சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்றவர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியின் பலத்தை நிரூபித்துள்ளனர். அதே போல இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.

இந்நிலையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தாக்கம் செலுத்திய வாஷிங்டன் சுந்தருக்கு ‘இம்பேக்ட் ப்ளேயர்’ விதியை அளித்து கௌரவித்துள்ளது பிசிசிஐ.  சுந்தர் பவுலிங்கில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் பேட்டிங்கில் இக்கட்டான நிலைமைகளில் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். கடைசி போட்டியில் அவர் அடித்த 53 ரன்கள் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணியாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments