Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் கோலியைக் காதலித்தேனா?... தமன்னா கொடுத்த பதில்!

Advertiesment
தமன்னா

vinoth

, புதன், 6 ஆகஸ்ட் 2025 (09:34 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது. காதலர் விஜய் வர்மாவுடன் வசித்து வரும் தமன்னா பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதற்கிடையில் அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடனான காதலையும் பிரேக் அப் செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னைப் பற்றிய கிசுகிசு ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். அதில் “நான் விராட் கோலியை காதலித்தேன் என வதந்திகள் அப்போது பரவின. நானும் அவரும் சேர்ந்து ஒரு விளம்பரத்தில் நடித்தோம். அந்த ஒருமுறைதான் நான் அவரை சந்தித்தேன்.  அதன் பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை. வதந்திகளை சமாளிப்பது கடினம்.  ஆனாலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் நினைக்க விரும்புவதை நினைத்துக் கொள்ளட்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது கார்த்தி சின்ன ஹீரோவா?... நெறியாளரின் கேள்விக்கு நச்சென்ற பதில் கொடுத்த லோகேஷ்!