Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியின் விதியை மாற்றிய அந்த 8 ஓவர்கள்… கலக்கிய இந்திய சுழலர்கள்!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (07:24 IST)
உலகக் கோப்பை இறுதி தோல்விக்கு ஆறுதலாக இந்திய அணி இப்போது ஆஸ்திரேலிய அணியை டி 20 தொடரில் வீழ்த்தியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நான்காவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார். 

இதன் பின்னர் ஆடிய ஆஸி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதில் முதலில் பவர் ப்ளே ஓவர்களில் ஆஸி அணி அதிரடியாக விளையாடும் போது கண்டிப்பாக வெற்றி பெறும் என தோன்றியது.

ஆனால் இந்திய சுழலர்களான அக்ஸர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் அட்டாக்குக்கு வந்த பின்னர் போட்டி இந்தியா பக்கம் சாய்ந்தது. இருவரும் இணைந்து 8 ஓவர்கள் வீசிய் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி, போட்டியை இந்திய அணியின் கைகளுக்குள் கொண்டு வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து வீசிய 48 பந்துகளில் 26 பந்துகள் டாட் பந்துகளாக அமைந்தது ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் அழுத்தத்தை தந்தது. இவர்களின் சிறப்பான ஸ்பெல்லால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments