ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் எடுத்து, ஆஸ்,.,க்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி-20 போட்டி இன்று ராய்ப்பூர், நாராயண சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி. எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், ஜெய்ஸ்வால் 37 ரன்னும், கெய்க்வாட் 32 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 8 ரன்னும், ரிங்கு சிங்க் 46 ரன்னும், ஜிதேஷ் சர்மா 35 ர்னனும் அடித்தனர்.
எனவே 9 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 174 ரன்கள் எடுத்து, ஆஸ்,.,க்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆஸ்., அணி சார்பில், ஹார்டி 1 விக்கெடும், ஜேசன் மற்றும் தன்வீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பென் 3 விக்கெட் கைப்பற்றினார்.