Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''நம்ம ரத்தத்திலயே வலயன்ஸ் இருக்கு''- 'சலார்' பட டிரைலர் ரிலீஸ்

salaar -prabash- prashanth neels
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (20:07 IST)
பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவின் ரிபல் ஸ்டாராக அறியப்படும் அவர்  நடிக்கும்  ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
அவரது சமீபத்திய படங்கள் பெரிதாக எடுபடாத நிலையில், சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
 
அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.
 
இந்த நிலையில், வரும் டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.
 
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சலார் முதல் பாகத்தின் டிரைலர் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி, இன்று மாலை  இப்பட டிரைலர் ரிலீஸாகியுள்ளது. சலார் டிரைலர் ஹம்பாலே யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டிரைலர்  பல  லட்சம் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.

கேஜிஎஃப் 1 மற்றும் 2 ஆகிய படத்தைப் போன்று இதன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. வில்லன்களாக பிருத்விராஜ் மற்றும் ஜெகபதிபாபு ஆகியோர் மிரட்டியுள்ளனர்.''உன்னை யாரும் தொடக்கூடாது ''என்பது போன்ற  பிரபாஸ்  பேசும் மாஸ் வசனங்கள் தியேட்டரில் அதிரும் என தெரிகிறது. ஒவ்வொரு காட்சியும் செதுக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இப்படத்தின் சண்டை காட்சிகளுக்கான அன்பறிவ் மெனக்கெட்டுள்ளனர். இப்பட டிரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தியேட்டரில் இப்படம் வசூல் சாதனை படைக்கும் எனக்  கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் உடல்நிலை.. மன்சூர் அலிகான் வெளியிட்ட உருக்கமான அறிக்கை..!