Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா& தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் துபாய்க்குப் பயணம்…ஏன் தெரியுமா?

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (09:40 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

ஆனால் இந்த போட்டியால் இப்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் துபாய்க்குப் பயணம் செய்யவுள்ளன. இந்தியா நியுசிலாந்து போட்டியில் எந்த அணி வெல்லும் எனத் தெரியாது. அதன் முடிவைப் பொறுத்தே இந்தியாவை துபாயில் எதிர்கொள்ளப் போகும் அணி எது என்பது தெரியவரும்.

அதனால் இரு அணிகளும் துபாய்க்கு செல்ல  இந்தியாவை எதிர்கொள்ளப் போகும் அணி அங்கேயே தங்கும் எனவும், நியுசிலாந்தை எதிர்கொள்ளப் போகும் அணி மீண்டும் பாகிஸ்தான் வந்து லாகூரில் விளையாடும் எனவும் சொல்லப்படுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் ஹைபிரிட் மாடலில் நடப்பதால் இந்த நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன்… சென்னை அணிக்கு திரும்பியது குறித்து அஸ்வின் சிலிர்ப்பு!

இன்றைய போட்டியில் ஷமியும் ஆப்செண்ட்டா?... களமிறங்கப் போகும் இளம் பவுலர்!

ரிஷப் பண்ட்டுக்கு நான் போட்டியா?... கே எல் ராகுல் அளித்த பதில்!

நியுசிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு!

தோல்விக்குப் பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்த ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments