Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

Advertiesment
இந்தியா

vinoth

, வியாழன், 27 நவம்பர் 2025 (07:59 IST)
இந்தியா  மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியையும் இழந்த நிலையில் இந்த தோல்வியால் வொயிட்வாஷ் ஆகியுள்ளது இந்தியா. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

இதனால் பயிற்சியாளர் கம்பீர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அவர் சீனியர் வீரர்களான அஸ்வின், ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்து ஓய்வுபெறவைத்துவிட்டு பரிசோதனை என்ற பெயரில் அணியில் வீரர்களின் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அது இந்திய அணிக்குக் கைகொடுக்கவில்லை. அதனால் அவர் பதவி விலகவேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஸ்வின் தற்போதைய டெஸ்ட் அணி குறித்த தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “இப்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியை வைத்துக்கொண்டு ஒரு சில சிறிய அணிகளைதான் வீழ்த்த முடியும். சில டெஸ்ட் அணிகளுக்கு எதிரா நாம் நிக்கவே முடியாது. உண்மையில் இப்போதுள்ள டெஸ்ட் அணி மிகவும் சுமாரான அணிதான். பும்ராவும் இல்லை என்றால் என்ன பண்ணுவார்கள்?” என வருத்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!