Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியுடன் ரிங்கு சிங்கை ஒப்பிடலாமா என தெரியவில்லை… அஸ்வின் பேச்சு!

vinoth
வெள்ளி, 19 ஜனவரி 2024 (14:09 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்சுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளையும் சிக்சராக்கி கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு வெற்றி தேடித் தந்ததன் மூலம் ரிங்கு சிங் ஒரே இரவில் கிரிக்கெட் உலகம் முழுவதும் அறிந்த நபராகிவிட்டார்.

இதையடுத்து இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிங்கு சிங் 60 ரன்களுக்கு மேல் ஆவ்ரேஜும் 170 க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் புதிய பினிஷராக வந்துள்ளார்.  இதனால் அவரை முன்னாள் கேப்டன் தோனியுடன் பலரும் ஒப்பிடுகின்றனர்.

இதுபற்றி பேசியுள்ள அஸ்வின் “தோனி இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படி விளையாடுவாரோ அது போல ரிங்கு சிங் விளையாடி வருகிறார். தோனி மிகப்பெரிய வீரர். அவரை ரிங்குவோடு ஒப்பிடலாமா என தெரியவில்லை. ஆனால் ரிங்கு சிங்கின் நிதானம் அவரை தோனியோடு ஒப்பிட வைக்கிறது. அவர் கே கே ஆர் அணிக்காக சில ஆண்டுகள் விளையாடாமல் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். ஆனால் அப்போது கூட அவர் பயிற்சி செய்யாமல் இருக்கமாட்டார் என கேள்வி பட்டிருக்கிறேன். இப்போது அவர், No Fear.. When i am here என்று சொல்லி சொல்லி அடிக்கிறார். “ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments