TNPL தொடர்… பந்தை சேதப்படுத்திய அஸ்வின் மீது புகார்… TNPL நிர்வாகம் எடுத்த முடிவு!

vinoth
செவ்வாய், 17 ஜூன் 2025 (09:33 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் திண்டுக்கல் அணியின் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து இரு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.  சில நாட்களுக்கு முன்னர் நடுவர் உடன் வாக்குவாதம் செய்ததோடு பேட்டையும் க்ளவுசையும் தூக்கி வீசியதற்காக அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மதுரை அணிக்கு எதிரானப் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக (Ball Tampering) மதுரை அணி நிர்வாகம் புகார் ஒன்றை வைத்தது. இதையடுத்து அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க சொல்லி TNPL நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் மதுரை அணியால் அப்படி பொருட்படுத்தத் தக்க ஆதாரம் எதையும் சமர்ப்பிக்க முடியாததால் அஸ்வின் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என TNPL நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments