Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டியில் விளையாடும் ரஸ்ஸல்… வீரர்கள் கொடுத்த ‘Guard of Honor’ கௌரவம்!

vinoth
புதன், 23 ஜூலை 2025 (08:49 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தாலும் பெரிதாக எந்த வெற்றியும் பெறாமல் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேலும் அந்நாட்டு வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் இடையே சம்பள பிரச்சனையும் நிலவி வருகிறது. இதனால் பல வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தேசிய அணி பல தொடர்களை வரிசையாக தோற்று வருகிறது.

இதற்கிடையில் அந்த நாட்டு தேசிய அணியில் இடம்பிடிக்கும் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்ததும் உலகெங்கும் நடக்கும் பிரான்ச்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் ஆர்வம் காட்ட தொடங்கி விடுகின்றனர். இதன் காரணமாக 30 வயதுக்குள்ளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஓய்வும் பெற தொடங்கி விடுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல். அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் டி 20 தொடரோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் கடைசி போட்டியில் விளையாடும் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ‘The guard of honour’ கௌரவத்தைக் கொடுத்து விடை கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments