Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் வாழ்க்கையில் நான் அடித்த மொத்த சிக்ஸ்களை அபிஷேக் ஷர்மா ஒரே இன்னிங்ஸில் அடித்துவிட்டார்… பாராட்டிய முன்னாள் வீரர்!

Advertiesment
என் வாழ்க்கையில் நான் அடித்த மொத்த சிக்ஸ்களை அபிஷேக் ஷர்மா ஒரே இன்னிங்ஸில் அடித்துவிட்டார்… பாராட்டிய முன்னாள் வீரர்!

vinoth

, திங்கள், 3 பிப்ரவரி 2025 (08:07 IST)
நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி அபாரமாக ஆடி 247 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் இந்த இமாலய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அபிஷேக் ஷர்மாவின் அபாரமான மெய்சிலிர்க்க வைக்கும் இன்னிங்ஸ்.அவர் நேற்று மைதானத்தில் வான வேடிக்கைக் காட்டினார். மைதானத்தின் 360 டிகிரியிலும் பந்துகளைப் பறக்கவிட்ட அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அவரது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளில் 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் அபிஷேக் ஷர்மாவின் இந்த இன்னிங்ஸைப் பாராட்டியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் “என் வாழ்நாளில் நான் அடித்த மொத்த சிக்ஸ்களை அபிஷேக் ஷர்மா 2 மணி நேரத்தில் ஒரு இன்னிங்ஸில் அடித்துவிட்டார் “ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபிஷேக் சர்மா அபார சதம்.. வரலாற்றில் படுமோசமான தோல்வி அடைந்த இங்கிலாந்து..!