U19 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிப் போட்டி இன்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீராங்கனைகள் மிகவும் அசத்தலாக பந்து வீசியனர். குறிப்பாக, கொங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, வெற்றி இலக்காக 83 ரன்கள் மட்டுமே கொண்டிருந்த இந்திய அணி, 11 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய கொங்கடி த்ரிஷா, 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து சிறப்பாக பேட்டிங் செய்தார்.
ஏற்கனவே நடப்பு சாம்பியனாக இருந்த இந்தியா, தற்போது இரண்டாவது முறையாகவும் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.