கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

vinoth
புதன், 25 ஜூன் 2025 (10:34 IST)
இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர்.

அவர் கேப்டனான பிறகு இந்திய அணியின் அனுகுமுறையே மாறியது. இந்திய அணிக்குள் ஆக்ரோஷத்தைப் புகுத்தியவர் என்ற பெருமை கங்குலியையே சாரும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிசிசிஐ தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

சமீபகாலமாக இந்திய சினிமாவில் விளையாட்டு வீரர்களின் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் சச்சின் மற்றும் தோனி ஆகியோரை அடுத்து கங்குலி பயோபிக் படமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கவுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் நடிக்கிறேன். அது மிகப்பெரிய பொறுப்பு. ஆனால் எனக்கு மிகவும் பதற்றமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments