ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

vinoth
திங்கள், 21 ஜூலை 2025 (07:18 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றுள்ளது. அடுத்த போட்டி மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

இந்த போட்டிக்கான அணியில் இடம்பெறும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷெட் தெரிவித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவருக்கு விரலில் காயமேற்பட்டதால் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அதே போல ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஆல்ரவுண்டர் வீரர் நிதிஷ்குமார் ரெட்டியும் ஜிம்மில் உடல்பயிற்சி செய்யும் போது காயமடைந்துள்ளார். இதன் காரணமாக எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்! என்ன காரணம்?

பிக்பாஷ் தொடரில் இருந்து விலகிய அஷ்வின்… காரணம் என்ன?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் உயர் பதவி.. அதிரடி அறிவிப்பு..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா?... வாஷிங்டன் சுந்தர் டிரேடுக்கு ‘No' சொன்ன நெஹ்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments