டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

vinoth
சனி, 19 ஜூலை 2025 (13:26 IST)
கிரிக்கெட்டின் எதிர்காலம் டி 20 கிரிக்கெட்தான் என்பது வெள்ளிடை மலை. அதனால் அடுத்த தலைமுறை வீரர்கள் அதிகமும் டி 20 கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறுதான் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர். அதற்கேற்றார் போல உலகம் முழுவதும் டி 20 லீக் போட்டிகள் நடந்து வருகின்றன.

அப்படி டி 20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வரும் வீரர்களில் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் பட்லர். அவர் தற்போது டி 20 கிரிக்கெட்டில் 13000 ரன்கள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளார். இந்த சாதனையைப் படைக்கும் ஏழாவது வீரர் அவராவார்.

இதற்கு முன்பாக இந்த மைல்கல்லை பொல்லார்ட், கிறிஸ் கெய்ல், விராட் கோலி, அலெக்ஸ் ஹேல்ஸ், சோயிப் மாலிக், ஆகியோர் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

சஞ்சு சாம்சன் உள்ளே… ஜடேஜா & சாம் கரண் வெளியே – 48 மணிநேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்… பட்டியலில் இருவர்!

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments