இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறார் அபிஷேக் ஷர்மா. முதல் பந்தில் இருந்தே முதலே பவுண்டரிகளை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா. ஐபில் மூலம் கவனம் ஈர்த்த அபிஷேக் இந்திய அணியில் இடம்பிடித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடிவரும் அபிஷேக் நிதானம் என்பதே இல்லாமல் காட்டடியாக பவுலர்களை விளாசிவருகிறார். இதுவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 190 ஸ்ட்ரைக் ரேட் வீதத்தில் 535 ரன்கள் அடித்துள்ளார். 2 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 829 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்குச் சென்றுள்ளார். இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளனர்.