Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 11 January 2025
webdunia

இயேசு சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள் என்ன தெரியுமா...?

Advertiesment
இயேசு சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள் என்ன தெரியுமா...?
1. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” (லூக்கா 23:34)

ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.
 
2. “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்” (லூக்கா 23:43)
 
3.“இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26-27).
 
4.“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46).
 
ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்பதற்கு “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தமாம்.
 
5. “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)
 
வேத வாக்கியம் நிறைவேறத் தக்கதாக “தாகமாயிருக்கிறேன்” என்றார் என்று யோவான் கூறுகிறார்.
 
6. “முடிந்தது” (யோவான் 19:30)
 
கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
 
* சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது.
 
* பழைய ஏற்பாட்டில் அவரு டைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங் களும் நிறைவேறி முடிந்தது.
 
* உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது. எத்தனையோ தீராத  வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு வந்ததுபோல மனுக் குலத்தின் பாவ வியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது.
 
* இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தது.
 
* இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.
* மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.
 
7. “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்”
 
இயேசு தம் ஜீவன் போகிற வேளையில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச் சொன்னார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயேசுவின் சரீர வாழ்வு நிறைவேறியது எப்போது...?