Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயேசுவின் சரீர வாழ்வு நிறைவேறியது எப்போது...?

இயேசுவின் சரீர வாழ்வு நிறைவேறியது எப்போது...?
இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாளாக, புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.


கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் நாள் தான் புனித வெள்ளி. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும்  உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. 
 
அந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இயேசு சிலுவையில் அறைந்த பிறகு சிலுவையோடு கல்வாரி மலையில் தூக்கி வைத்தார்கள். ஒரு புறம் சதுசேயர்கள்,  பரிசேயர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மறுபுறம் அவரைச் சுற்றி அரசு அலுவலர்கள், சேவகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 
 
அப்போது தான் தன் தந்தையை நோக்கி தந்தையே இவர்களை மன்னியும் என்று பேசினார். தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு  கள்வர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது. அப்போது தான் மனம்மாறிய கள்வனுக்கு நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என  ஆறுதலாகக் கூறப்பட்டது. 
 
மூன்றாவதாகத் தம் சிலுவை அடியில் பார்த்த போது தம் அன்பு அம்மா நின்று கொண்டிருப்பதையும் தம் அன்புச் சீடர் நின்று கொண்டிருப்பதையும் கண்டார்.  அப்போது தான் அம்மாவை நோக்கி அம்மா இவரே உம் மகன் என்றும், சீடரை நோக்கி இவரே உன் தாய் என்றும் மொழிந்தார்.
 
ஒரு வேளை தந்தையும் தம்மைக் கைவிட்டாரோ என்று எண்ணிய போது தான் என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று உரக்கக் கத்தினார்.  எல்லாவற்றையும் முடித்ததாய் எண்ணிய போது, அவருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் தாகமாய் இருக்கிறது என்று சொன்னார். அவர்கள் கொடுத்த புளித்த  திராட்சை இரசத்தைக் குடித்து விட்டு எல்லாம் நிறைவேறிற்று என்று கூறினார். இந்த எல்லாம் நிறைவேறிற்று என்று அவர் கூறியதில் தான் பல இறைவாக்குகளும்  திருச்சட்டங்களும் நிறைவேறின.
 
அதாவது அவருடைய சரீர வாழ்வு நிறைவேறியது. முன் குறித்து வைக்கப்பட்ட அடையாளங்கள், இறைவாக்குகள் நிறைவேறின. தந்தையாகிய கடவுள் அனுப்பிய,  மனித இரட்சிப்பின் பணி முடிந்தது. எல்லாவற்றையும் நிறைவேற்றிய பிறகு தான் தந்தையை நோக்கி இறுதியாக அவர் அழைத்தார். அப்போது தான் தந்தையே உமது கைகளில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று ஜெபித்து உயிர் துறந்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிர்ஷ்டத்தை வரவழைக்க சில எளிய பரிகாரங்கள் !!