Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமா...?

கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமா...?
சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொள்வதை நாமறிவோம். உலகில் எந்தக் கிறிஸ்தவக் குழந்தையிடமும்  சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை எனலாம்.

குள்ளமான, குண்டான உருவம், வெண்மையான தாடி, சிவப்பு வெல்வெட் உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா.
 
கிறிஸ்மஸ் தாத்தா வாகனம் இனிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் இருப்பதுபோல் காட்டப்படும், அதை எடுத்து கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.
 
மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்ணாடி சகிதமாக வலம் வரத் தொடங்கி விட்டார். 
 
கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் இன்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும், கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப்  போனது. 
 
கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும் ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம். உண்மையில் புனித நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா உருவாகக் காரணம் என்று சொல்லவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுளின் குமாரனாய் இவ்வுலகில் வந்த இயேசு !!